திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நாளை கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2025 03:05
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா நாளை (மே 31) காலை 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு கோயில் முன்புள்ள ராஜகோபுரம் மற்றும் கோயில் பிராகரங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நான்கு வீதிகளிலும் அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 8 மாலை 3:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.