Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் முருகநாதீஸ்வரர் ... வைகாசி சோமவாரம்; சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபாடு வைகாசி சோமவாரம்; சிவபெருமானுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முதல்வர் ரேகா குப்தா 2 நாள் ஆன்மிக பயணம்; கங்கையில் புனித நீராடி வழிபாடு
எழுத்தின் அளவு:
முதல்வர் ரேகா குப்தா 2 நாள் ஆன்மிக பயணம்; கங்கையில் புனித நீராடி வழிபாடு

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2025
10:06

புதுடில்லி; முதல்வர் ரேகா குப்தா, இரண்டு நாள் பயணமாக குடும்பத்துடன் நேற்று, உத்தராகண்ட் சென்றடைந்தார். டில்லியில் நேற்று அதிகாலை புறப்பட்ட ரேகா குடும்பத்தினர், உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் சென்றனர். நேற்று காலையில், கங்கை நதியில் புனித நீராடினர். அதைத் தொடர்ந்து, ஹரித்வாரில் ஒரு தர்மசாலாவைத் முதல்வர் ரேகா திறந்து வைத்தார். மாலையில், ரிஷிகேஷ் சென்ற ரேகா மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு நடந்த கங்கா ஆரத்தியில் பங்கேற்று வழிபாடு செய்தனர். இரவு ரிஷிகேஷில் தங்கினர். இன்று காலை கேதார்நாத் கோவிலில் நடக்கும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்கின்றனர். டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்று கடந்த 30ம் தேதி நுாறு நாட்கள் நிறைவடைந்தன. அதை முன்னிட்டு, புதுடில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில், டில்லி அரசின் நூறு நாள் சாதனைகள் குறித்து ரேகா விரிவாக பேசினார். இந்நிலையில், அவர் குடும்பத்தினருடன் இரண்டு நாள் ஆன்மிக பயணம் சென்றுள்ளார்.


வாகனங்கள் மோதல்;  முதல்வர் ரேகா குப்தா நேற்று அதிகாலையில், ஷாலிமர் பாகில் உள்ள தன் வீட்டில் இருந்து குடும்பத்துடன் உத்தராகண்ட் மாநிலத்துக்கு காரில் சென்றார். அவரது இரண்டு நாள் பயணத்தில் செய்தி சேகரிக்க, பத்திரிகையாளர்களும் ஐந்து காரில் அழைத்துச் செல்லப்பட்டனர். காலை 10:00 மணிக்கு, ஹரித்வார் நகருக்கு சில கி.மீ., முன்னதாக, முதல்வரின் வாகனத் தொடரணியில் இருந்த ஒரு கார் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால், பின்னால் வந்த பத்திரிகையாளர்கள் இருந்த ஐந்து கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதின. பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாத நிலையில், சற்று நேரத்தில் கார்கள் புறப்பட்டுச் சென்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar