Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மாரியம்மன் கோவிலில் 36ம் ... மழை வேண்டி உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை செய்திட பக்தர்கள் கோரிக்கை மழை வேண்டி உச்சிப்பிள்ளையாருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவிலில் ராம நவமி விழா காவி கொடியேற்றத்துடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோவிலில் ராம நவமி விழா காவி கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

26 மார்
2026
05:03

உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது


அயோத்தி ராம ஜென்மபூமியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது முதல் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தாண்டு ராம நவமி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு சைத்ர நவராத்திரியின் அஷ்டமி நாளான இன்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி ஆலய வளாகத்திற்குள் அமைந்துள்ள கோவிலில், அனைத்து வேத சடங்குகளையும் பின்பற்றித் துவஜாரோஹணம் (கொடியேற்றம்) நடைபெற்றது. காவி நிறத்திலான இக்கொடியில் ‘ஓம்’ சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. 19 அடி 7 அங்குல உயரமுள்ள கொடிமரத்தில் இக்கொடி ஏற்றப்பட்டுள்ளது; இக்கொடியானது 9 அடி 3 அங்குல நீளமும், 4 அடி 7 அங்குல அகலமும் கொண்டது. ராம நவமி தினமான நாளை காலை முதல் ஸ்ரீராமருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் ராம்லல்லாவின் தரிசனம் காண குவிந்து வருகின்றனர்.


சூரிய திலகம் வழிபாடு: ராம நவமியை முன்னிட்டு சூரியனின் கதிர்கள் ராம்லாலாவின் நெற்றியில் ஒளிரும் அற்புத காட்சி நடைபெறும். இது குறித்து ஆச்சார்யர் பண்டிட் ராகேஷ் திவாரி கூறியதாவது; அனைத்துச் சாதகமான சமயங்களும் (சம்பவங்களும்) 27ஆம் தேதியன்று அமைகின்றன; எனவே, ராம் நவமி வரும் மார்ச் 27, வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்படும். அயோத்தி ராமர் கோவிலில் சூரிய திலகம் நிகழ்வும் அன்றைய தினமே நடைபெறும்..." இவ்வாறு கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar