பதிவு செய்த நாள்
15
டிச
2012
02:12
இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்: கிறிஸ்துமஸ் விழா. கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் தாத்தா, ஒளியில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள், கேக் போன்றவை இந்த கொண்டாட்டங்களின் ஹை லைட்
குடில்: எளிமையை உலகிற்கு எடுத்துரைக்க, மனித சாயலாக பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தார். பிறந்த போது கடும் குளிர்காலம் என்பதால் தொழுவத்திலிருந்த பசுக்கள், குழந்தை இயேசுவின் அருகில் சென்று அவ்வப்போது பெருமூச்சு விட்டு உஷ்ணத்தை கொடுத்ததாம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் இன்றும் இத்தாலியர்கள் பசுக்களுக்கு சிறப்பு செய்கின்றனர்.
கிறிஸ்துமஸ் மரம்: கிறிஸ்துமஸ் விழாவின் போது பாரம்பரிய வழக்கப்படி ஊசியிலை மரத்தை அலங்கரித்து பரிசுப் பொருட்களை கட்டித் தொங்கவிட்டு, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அவற்றைத் தந்து மகிழ்ந்தனர். நாளடைவில் தற்போது வீடுகளில் சிறிய அளவில் காட்சிக்கு வைக்கின்றனர்.
கிறிஸ்துமஸ் தாத்தா: 4ம் நூற்றாண்டில் ரோமில் உள்ள வைசியா நகரில் பிறந்தவர் நிக்கோலஸ். மற்றவர்களிடம் அன்பாய் பேசி, பரிசு பொருட்களை தந்து மகிழ்ந்தார். புனிதராக (செயின்ட்) அறிவிக்கப்பட்ட நிக்கோலஸ் கல்லறைக்கு பரவலாக மக்கள் வரத் தொடங்கினர். அவரது பெயரை டச்சு மொழியில் சின்டா கிளாஸ் எனவும், ஆங்கிலத்தில் சாண்டாகிளாஸ் எனவும் அழைத்தனர். அவரை நினைவு கூறும் விதத்தில், நீண்ட வெள்ளைத் தாடியும், சிவப்புநிற அங்கியுடன் முதியவர் தோற்றம் உருவானது. பாடகர் குழுவுடன் வீடுகளுக்கு சென்று ஆடிப்பாடி பரிசுகளை
பகிர்ந்தளித்து மகிழ வைக்கின்றனர், கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்.
கேரல்ஸ்: குழுவாக ஆடலுடன் பாடும், ஆங்கில கேரல் பாடல்கள், 15ம் நூற்றாண்டில் நாட்டுப்புற வடிவில் அமைக்கப்பட்டது. இந்தியாவில் தமிழ் மொழியில் தான் முதன் முதலாக, குருண்டால் என்னும் போதகரால் கிறிஸ்துமஸ் கேரல் உருவாக்கப்பட்டது.