Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரெங்கநாத பெருமாள் கோயில் ... ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2025
11:06

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில் புவனேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வேதமந்திரங்கள் முழங்க தவத்திரு ப்ரணவநந்த சுவாமிகள் தலைமையில், விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்வார்கள்.

புதுக்கோட்டை கீழ 7ம் வீதியில், ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் உள்ளது. இங்கு ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன், அஷ்டபுஜ துர்காதேவி, பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியாக சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த, அதிஷ்டானம் பல கோடி ரூபாய் செலவில் முழுவதும் கல்ஹாரமாக (கற்கோவில்) கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தன. கோவில் பாலாலயத்தை முக்தியடைந்த தவத்திரு ஓங்காரநந்த சுவாமிகள் முன்னிலையில் சிருங்கேரி சங்கராச்சாரியார்கள் தொடங்கி வைத்தார். பின், திருப்பணிகள் அதிஷ்டான பீடாதிபிதி தவத்திரு ப்ரணவாநந்த சுவாமிகள், அதிஷ்டான செயலாளர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் மேற்பார்வையில் திருப்பணிகள் நிறைவு பெற்றன.

தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் 3ம் கால யாக பூஜையின்போது காணொலி காட்சி வாயிலாக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசினார். இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஆன்மீக மடாதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இக்கோவிலில், 21 ஆண்டுகளுக்கு பிறகு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சத்யாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ் வரர் கோவில் மண்டலபிஷேக நிறைவு பூஜை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்குட்பட்ட கிருஷ்ணன் கோயில் தெப்பம் புனரமைப்பு பணியின் போது மையப் ... மேலும்
 
temple news
சூலுார்: ஸ்ரீ தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி சங்காபிஷேகம் நடந்தது. ரங்கநாத ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரையில் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழாவில் பங்கேற்க, திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை முத்துரட்சக மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, காங்., மாநில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar