Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி விசாக பால் குட திருவிழா; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாகம் கொண்டாட்டம் ஏன்? எவ்வாறு வழிபட வேண்டும்?
எழுத்தின் அளவு:
வைகாசி விசாகம் கொண்டாட்டம் ஏன்? எவ்வாறு வழிபட வேண்டும்?

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2025
04:06

வைகாசி மாத பவுர்ணமியன்று, சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரம் கூறுகிறது. இதனால் இந்நாள் முருகனின் பிறந்தநாள் ஆகிறது. "விசாகன் என்றால் "குமரன், இளைஞன் என்ற பொருள்கள் உண்டு. முருகன் என்றும் இளையவன் என்பதால், விசாகம் நட்சத்திரம் அவருக்குரியது ஆயிற்று. பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகனிடத்தில் காணலாம். இந்நாளில் முருகன் தலங்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்வர்.

சரவணபவ மந்திரம்: முருகனுக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. இதில் சிறப்பு மிக்க மந்திரமாக "சரவணபவ அமைந்துள்ளது. இதனை மனமுருகிச் சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி(பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. "சரவணன் என்றால் "பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன் என்று பெயர். இதனால், முருகன் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை "சரவணப்பொய்கை என்று சொல்வர்.

வந்தான் வடிவேலன்: திருவண்ணாமலையில் வசித்த அருணகிரிநாதரின் பக்தியையும், பாடல் திறனையும் கண்டு, சம்பந்தாண்டன் என்ற புலவர் பொறாமை கொண்டார். இதையடுத்து பிரபுட தேவன் என்ற மன்னன் முன்னிலையில் இருவரில் யாருடைய பக்தி சிறந்தது என்ற போட்டி நடந்தது. முருகனைப் பாடி வரவழைக்க முயன்றார் அருணகிரிநாதர். ஆனால், சம்பந்தாண்டான் முருகனின் திருக்காட்சி கிடைக்காதபடி மந்திரங்களை ஜபித்தான். ஆனால், மந்திரங்களை முறியடித்த முருகப்பெருமான், கோயிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் இடதுபுறமுள்ள கம்பத்தில் காட்சி தந்தார். கம்பத்தில் காட்சி தந்ததால், "கம்பத்து இளையனார் என்ற பெயர் பெற்றார். இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் ""அருணையில் ஒரு நொடிதனில் வரும் மயில்வீரா என்று குறிப்பிடுகிறார்.

திருச்செந்தூரில் நீராடும் முறை: வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம் திருச்செந்தூர். இந்த ஊரில் இருந்த சூரனை சம்ஹாரம் செய்யத்தான் முருகன் அவதாரமே நிகழ்ந்தது. இங்கு பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு அடுத்து நாழிக்கிணற்றில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது சரியான நடைமுறை அல்ல. கடலில் குளித்த உப்புத்தண்ணீரைக் கழுவுவதற்காக நாழிக்கிணறில் குளிப்பதாக கருத்து கொண்டுள்ளனர். முருகப்பெருமான் பத்மாசுரனை அழிக்க லட்சம் வீரர்களுடன் சென்றார். அவர்களின் தாகம் தீர்க்க தன் வேல் கொண்டு எறிந்து கடற்கரையிலேயே அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் நல்ல தண்ணீர் உள்ள நாழிக்கிணறை உருவாக்கினார். முருகன் உருவாக்கிய அந்த நாழிக்கிணறில் தான் அனைவரும் முதலில் நீராடவேண்டும். பிறகு கடலுக்குச் சென்று கூச்சலிடாமல், பக்தியுடனும், கவனமாகவும் குளிக்க வேண்டும். கடலில் சென்று குளித்த பிறகு அறைகளில் சென்று குளித்து, பெற்ற புண்ணியத்தைக் குறைத்துக் கொள்ளக்கூடாது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar