திண்டிவனம்: தீவனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூரில் ஆதிநாராயண பெருமாள் என்கிற லட்சுமி நாராயணபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் புதிதாக ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு கடந்த அக். 28ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடந்து வந்தது. இதன் நிறைவு நாளான நேற்று காலை 7 மணிக்கு மூலவர் பெருமாள், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மற்றும் ராகு, கேது சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மண்டல பூர்த்தி நிறைவு விழாவில் மூலவர் லட்சுமிநாராயண பெருமாள் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்திருந்தார்.