திருநெல்வேலி: பாளை., தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாளை., தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோயிலில் 3வது கும்பாபிஷேக விழா வரும் 2013 ஜனவரி 23ம் தேதி நடக்கவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 12 லட்சம் ரூபாய் செலவில் கோயில் விமானம் மற்றும் கோபுரத்தின் பழுதுகளை நீக்கி பெயின்ட் அடித்தல், மேல்தளத்தை செப்பனிடுதல், தரைதளத்தில் கிரானைட் கற்கள் பதித்தல், பழைய மின் இணைப்புகளை புதுப்பித்தல், கோயில் உள் வாசலை மாற்றி அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்தவுடன் யாகசாலை அமைத்தல் மற்றும் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் துவங்கவுள்ளது.