விசாகப்பட்டினம் கடற்கரையில் 91 அடி உயர அயோத்தி ராமரை தரிசிக்க குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2025 12:06
விசாகப்பட்டினம்; விசாகப்பட்டினத்தில் உள்ள அயோத்தி #ராமர் கோயிலின் 91 அடி உயர பிரதிமையில் பிரார்த்தனை செய்ய பக்தர்கள் அதிக அளவில் கூடுகிறார்கள்.
ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினம் கடற்கரையில் ராமஜன்ம பூமி கோவிலைப் போன்ற மாதிரி கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. 91 அடி உயரம் கொண்ட ராமர் கோவில் மாதிரியைக் காண பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இது குறித்து கோவில் குருக்கள் கூறியதாவது; அயோத்தியில் கட்டப்பட்டதைப் போலவே இங்கேயும் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி கோயிலுக்குச் சென்று வழிபட முடியாத பக்தர்கள் இங்கு வந்து வழிபடலாம் என்றார்.