Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் சுவரில் காசு ஒட்டினால் ... அபார ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட சோதனை, மனச்சுமை நீங்கும்..! அபார ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட ...
முதல் பக்கம் » துளிகள்
பழமையான சம்பிகே ஸ்ரீ வெங்கடராமசுவாமி கோவில்
எழுத்தின் அளவு:
பழமையான சம்பிகே  ஸ்ரீ வெங்கடராமசுவாமி கோவில்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2025
12:06

துமகூரு மாவட்டத்தில் உள்ளது சம்பிகே கிராமம். இங்கு பல கோவில்கள் உள்ளன. அவை, பண்பாட்டு, பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. இந்த கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ வெங்கடராமசுவாமி கோவில். கோவிலின் மூலவராக லட்சுமி தேவியுடன், சம்பிகே ஸ்ரீனிவாசர் காட்சி அளிக்கிறார். இந்த கோவில் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு, கவுதம மகரிஷி குலத்தை சேர்ந்த பாஸ்கரர் என்ற பிராமணரால் நிறுவப்பட்டது. முன்னொரு காலத்தில், பாஸ்கரர், வியாச மகரிஷியின் தரிசனத்தை பெறுவதற்காக, இமயமலைக்கு சென்றார். வழியில் உள்ள பல புனித தலங்களுக்குச் சென்று நீராடி தன் பாவங்களை போக்கினார். அச்சமயத்தில், வெங்கடராமசுவாமி சிலையை அவர் கண்டெடுத்தார். அதை வைத்து பூஜை செய்துவிட்டு புறப்பட்டார் என புராணங்கள் கூறுகின்றன.

வழிபாடு

இதை மஹாராஜா ஹன்சத்வஜனின் மகன் சுதன்வன், நான்காம் நுாற்றாண்டில் வழிபட்டதாக புராணம் கூறுகிறது. இந்த கோவிலில், வைகுண்ட ஏகாதசி, ரதோத்சவம், பிரம்மோத்சவம் ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. அப்போது, உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, பல மாவட்டங்களை சேர்ந்தோரும் வருகின்றனர். ரத ஊர்வலங்கள் சிறப்பாக நடக்கும். அச்சமயத்தில், கோவில் வளாகம் திருவிழா கோலத்தில் இருக்கும்.

பக்தர்களின் வருகை

கோவிலில், நவகிரகங்கள், நாகராஜர், ஆதிசேஷர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உண்டு. தினமும் ஸ்ரீனிவாசருக்கு அபிஷேகம், பூஜைகள் விமர்சையாக நடக்கின்றன.

எப்படி செல்வது?

பஸ்: மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, பஸ் மூலம் துமகூரு பஸ் நிலையத்திற்கு செல்லவும். அங்கிருந்து பஸ், டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.ரயில்: கெம்பேகவுடா ரயில் நிலையத்தில் இருந்து, ரயில் மூலம் குப்பி ரயில் நிலையம் செல்லவும். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம்

 
மேலும் துளிகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar