மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி சித்திரை வீதிகளில், இரவில் பக்தர்கள் வசதிக்காக சோலார் விளக்குகள் அமைக்க வேண்டும். மதுரையில் இரவு நேர மின்வெட்டு அதிகம் உள்ளது. சபரிமலை சீசனை முன்னிட்டு மதுரைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகம். மாலை முதல் இரவு வரை மீனாட்சி கோயில் வாசல்களில் நீண்ட வரிசையில் நின்று தரிசனத்துக் செல்கின்றனர். வெளிமாநிலங்கள், நாடுகளில் இருந்தும் வரும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பயணிகளின் வருகைக்கேற்ற வசதிகள் குறைவாக உள்ளது. இரவில் சித்திரை வீதிகள் இருண்டு கிடக்கின்றன. குறிப்பாக தெற்கு கோபுரம் பகுதி கும்மிருட்டாக உள்ளது. இப்பகுதியை பெண்கள் அச்சத்துடன் கடக்கின்றனர். கோயிலை சுற்றிலும் பூங்கா அமைந்துள்ள இடங்களில் சோலார் விளக்குகள் உள்ளன. அவை பயனின்றி உள்ளது. சித்திரை வீதிகளில் கோயில் நிர்வாகம் அல்லது சுற்றுலாத்துறை சோலார் விளக்குகளை அமைக்க வேண்டும்.