Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ் சிந்தனை 4: விண்ணுலகில் ... மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி சோலார் விளக்குகள்! மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 டிச
2012
10:12

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழா 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஒன்பதாம் நாள் தேரோட்டம் நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் காலை 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜை நடக்கிறது. 9.15 மணிக்கு மேல் திருக்கொடியேற்றமும், மாலை 4 மணிக்கு அரிகரனின் மங்கள இசையும், விஜயநாராயண சுவாமியின் சமய சொற்பொழிவும், இரவு 9 மணிக்கு நீலகண்டனின் பக்தி இன்னிசையும் நடக்கிறது. இரண்டாம் நாள் விழாவன்று காலை 4 மணிக்கு மூஷிக வாகனத்தில் சுவாமி உலாவும், மாலை 5 மணிக்கு மேல் ஜோதி ராமலிங்கம், விஜயநாராயண சுவாமிகளின் சமய சொற்பொழிவும், இரவு 8க்கு பஜகோவிந்தம் பஜனை மண்டலியின் இன்னிசையும் ,இரவு 9.30க்கு புஷ்பக விமானத்தில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. மூன்றாம் நாள் திருவிழாவன்று காலை 8க்கு புஷ்பக விமானத்தில் சுவாமி உலாவும், மாலை 4க்கு வைஷ்ணா, விஜயலெட்சுமி குழுவினரின் சமயசொற்பொழிவும், 5க்கு சுபாஷ் குழுவினரின் புல்லாங்குழல் இசையும், இரவு 10.30ககு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.நான்காம் நாள் விழாவன்று காலை 8க்கு பூதவாகனத்தில் சுவாமி பவனியும், மாலை 5க்கு கந்தசுவாமிபிள்ளை, குகசீல ரூபன் ஆகியோரின் சமயசொற்பொழிவும், இரவு 7க்கு ரம்யாகணேசனின் இன்னிசையம், தொடர்ந்து சீலன் குழுவின் பக்திஇன்னிசையும், இரவு 10க்கு பறங்கிநாற்காலி வாகனததில் சுவாமி பவனியும் நடக்கிறது. ஐந்தாம் நாள் விழாவன்று காலை 5க்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், காலை 6க்கு கருட தரிசனமும், மாலை 4க்கு அய்யப்பன்பிள்ளையின் சமயசொற்பொழிவும், இரவு 6க்கு நாதலெட்சுமி குழுவின் இன்னிசையும், இரவு 10க்கு ரிஷப வாகனத்தில் சுவாமி பவனியும் நடக்கிறது. சுசீந்திரம் இளைஞரணி சார்பில் சுவாமி வாகனத்திற்கு முன்பு பஞ்சவாத்தியம், யானை மற்றும் முத்துக்குடை அலங்கார ஊர்வலமும், தொடர்ந்து வாணவேடிக்கையும் நடக்கிறது.

ஆறாம் நாள் விழாவன்று காலையில் பூங்கோயில் வாகனத்தில் சுவாமி பவனியும், மாலை 5க்கு நாராயணனின் சமயசொற்பொழிவும், இரவு 7க்கு திருபண்ணிசையும், இரவு 8க்கு தாணுவின் பக்திமெல்லிசையும், இரவு 10க்கு இந்திர வாகனத்தில் சுவாமி பவனியும் நடக்கிறது. ஏழாம் நாள் விழாவன்று காலை 5க்கு பல்லக்கு வாகனத்தில் சுவாமி பவனியும், மாலை 4க்கு ஜெயச்சந்திரனின் சமயசொற்பொழிவும், மாலை 4.30க்கு நடராஜசுவாமிக்கு திருச்சான்று சார்த்துதலும், மாலை 5க்கு சங்கமித்திரா மற்றும் பிரபுவின் பக்திஇன்னிசையும், இரவு 10க்கு கைலாசபர்வத வாகன பவனியும் நடக்கிறது. திருமேனிகாக்கமூர் முதல் பிடாகை சார்பில் சுவாமி வாகனத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.எட்டாம் நாள் விழாவன்று காலை 5க்கு சிதம்பரேஸ்வரர் வீதியுலாவும், மாலை 5க்கு குருபிரகாசின் நாமஜெபமும், 5.30க்கு சண்முகத்தின் சமயசொற்பொழிவும், இரவு 9க்கு பக்திஇன்னிசையும், சிதம்பரேஸ்வரர் வீதி உலாவும், நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழாவன்று காலை 4க்கு கங்காளநாதர் பிட்சாடனராக வீதி உலாவும், 7.45க்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தலும், மாலை 5க்கு ராமசுவாமி, அய்யப்பன் , ராம.முருகன் ஆகியோரின் சமயசொற்பொழிவும், இரவு 8க்கு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சிறப்புநிகழ்ச்சியும், இரவு 12க்கு சப்தாவர்ண காட்சியும் நடக்கிறது.பத்தாம் நாள் விழாவன்று காலை 4க்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5க்கு நடராஜமூர்த்தி சுவாமிவீதி உலாவும், அதைத் தொடர்ந்து தியாகராஜன், விஜயலெட்சுமி, மாதேவன்பிள்ளை, செல்லப்பன்பிள்ளை மற்றும் சுவாமி பத்மேந்திரா ஆகியோரின் சமயசொற்பொழிவும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகர், கோயில் கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன், மேலாளர் ஆறுமுகநயினார்பிள்ளை, கணக்கர் கண்ணன் ஆகியோர் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்: மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பாவை பாசுரங்கள் கொண்ட பட்டு அணிந்து, ... மேலும்
 
temple news
கோவை; ஆண்டாள் அருளிய திருப்பாவை, மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை பாராயணம் செய்வதோடு, ... மேலும்
 
temple news
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு, பஜனை துவங்கியுள்ளது. வைணவ ... மேலும்
 
temple news
சென்னை; ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சங்கரமடத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவில் கடந்த, 13ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar