பதிவு செய்த நாள்
18
டிச
2012
11:12
க.பரமத்தி: விவேகானந்தர் இளைஞர் சமூக சேவா அறக்கட்டளை, இந்து முன்னணி மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பில், பள்ளிப்பட்டி அண்ணா நகரில் திருவிளக்கு பூஜை நடந்தது. பள்ளப்பட்டி அண்ணா நகர் விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும், இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் சார்பில், பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடந்து வருகிறது. நடப்பாண்டு, 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள், ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர். மங்கல மற்றும் பூஜைப் பொருட்கள் விவேகானந்தர் இளைஞர் சமூக சேவா அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை விவேகானந்தர் இளைஞர் சமூ க சேவா அறக்கட்டளை தங்கதுரை, சக்திவேல், செந்தில், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், குருசாமிகள் மம்தா, சுப்ரமணி, பாலு, கலைவாணன் ஆகியோர் செய்திருந்தனர்.