சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மார்கழி மாத பஜனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மார்கழி முதல் நாளான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மகிளா சங்கம் சார்பில் பஜனை பாடல்களும், திருப்பாவை, திருவெம்பாவை பாடினர். அதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடந்தது.அதையொட்டி ராமர், லட்சுமணர், சீதா, அனுமன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கணேஷ் குருக்கள் பூஜைகள் செய்தார்.சங்கராபுரம்: காட்டுவனஞ்சூர் ஆஞ்சநேயர் கோவிலில் மார்கழி சிறப்பு பூஜை நடந்தது.காலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஓய்வு பெற்ற பி.டி.ஓ., வெங்கடேசன் முன்னிலையில் மார்கழி மாதம் 30 நாட்களும் ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.