யாத்திரைகள் மனங்களை செம்மைபடுத்த தான் வேளாக்குறிச்சி ஆதீனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2012 11:12
ராஜபாளையம்: யாத்திரைகள் வகுத்ததே மனங்களை ஒருமைப்படுத்தி, செம்மைப்படுத்த தான் என வேளாக்குறிச்சி ஆதீனம் பேசினார். ராஜபாளையத்தில் நடந்த திருக்கயிலை திருப்பயண புத்தக வெளியீட்டுவிழா நடந்தது. எழுத்தாளர் ராமதிலகம் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு, யாத்திரை சென்றவர்களுக்கு கயிலைமணி விருது கொடுத்து அவர் பேசியதாவது: புறஇருளை நீக்கி, பாரத தேசத்தை காக்க பல பெரியவர்கள் தோன்றி, வழிநடத்தி உள்ளனர். மானுட வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என கற்றுகொடுத்தனர். காலத்தால் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், நிலைத்து நிற்பது நமது மதம். நம்மை உணர வேண்டும், நமக்குள் குறைபாடுகள் வரும்போது தான் புறசமயங்கள் வருகின்றன. வலியவர், முதியோர் என்றில்லாமல் கயிலை செல்ல கடவுளிடம் விண்ணப்பிக்க வேண்டும். கடவுளை காணும் மனஉறுதி வேண்டும். யாத்திரைகள் வகுத்ததே மனங்களை ஒருமைப்படுத்தி, செம்மைப்படுத்த தான், என்றார். விழாவிற்கு சேக்கிழார் மன்ற தலைவர் செண்பகம் தலைமை வகித்தார். பன்னிரு திருமுறை மன்ற நிறுவனர் சின்னுரெட்டி வரவேற்றார். முதல் புத்தகத்தை மன்ற செயலாளர் கோவிந்தராஜ் பெற்றார். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி செயலாளர் ஏ.ஏ.சுப்பராஜா உள்பட பலர் வாழ்த்தினர்.