சாக்கோட்டை உய்யவந்தம்மன் தேர்த்திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2025 05:07
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று நடந்தது.
சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன் கோயிலில் கடந்த ஜூன் 17ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. கடந்த ஜூன் 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, முக்கிய திருவிழாவான பால்குட திருவிழா நேற்று நடந்தது. தினமும், அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், தீச்சட்டி, பறவைக்காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. முன்னதாக அம்மன் தேருக்கு எழுந்தருளால் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் சாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தை ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.