காளஹஸ்தி தர்மராஜர் சுவாமி கோயிலில் சுவாமி வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2025 06:07
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான திரௌபதி சமேத தர்மராஜர் சுவாமி கோயிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் நான்காம் நாளில் திரௌபதி அம்மன் கிருஷ்ணர் மற்றும் அர்ச்சுனன் வலம் வந்து அருள்பாலித்தனர். முன்னதாக கோயிலில் அர்ஜுனன், திரௌபதி அம்மன் மற்றும் பாண்டவர்களின் உற்சவ சிலைகள் கண்கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து சப்பரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது, பழைய வரதய்யபாளையம் சாலை, ஜெயராமராவ் தெரு, பஜார் தெரு, தேர் தெரு, நேரு தெரு மற்றும் நகரி வழியாக வலம் வந்த சுவாமிக்கு ஒவ்வொரு வீட்டிலும் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இந்த ஊர்வலத்தில் கோயில் ஊழியர்கள் துர்கா பிரசாத், சாய் மற்றும், பூசாரிகள் புருஷோத்தம், ரவி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.