கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனித் திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு ஆனித்திருமஞ்சனம் இன்று நடந்தது. ஆண்டுக்கு 6 முறை நடராஜருக்கு மகா அபிேஷகம் நடத்தப்படுவது வழக்கம். அதில் ஒன்றான ஆனித் திருமஞ்சன இன்று காலை திருவாசகம் முற்றோதல் துவங்கி, சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜர், சிவகாமி அம்மை மற்றும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பேரொளி வழிபாடு நடந்தது. சங்கு, கயிலை வாத்தியம், முழவு, கஞ்சிரா, பிரம்மதாளம் வாசித்து பூஜைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலிலும், நடராஜருக்கு ஆனித்திருமஞ்சன வழிபாடு நடந்தது.