சிக்கல்; சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சி ஆய்க்குடி கிராமத்தில் நவநீதகிருஷ்ணன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது.
இன்று காலை 7:25 மணிக்கு விஸ்வரூபம் சுப்ரபாதம் உள்ளிட்ட விசேஷ ஹோமங்களும், பூர்ணாகுதிக்கு பிறகு கடம் புறப்பாடு நடந்தது. காலை 11:15 மணிக்கு கோபுர விமான கலசத்தில் திருப்புல்லாணி ஜெயராம் பட்டர் தலைமையில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர் நவநீத கிருஷ்ணன், கருடன், விநாயகர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யாதவர் சங்கம் மற்றும் ஆய்க்குடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.