போலி தரிசன டிக்கெட் விற்பனை; திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2025 12:07
திருப்பதி; பெடிந்தி பிரபாகராச்சாரியார் என்ற பெயரில் வைஷ்ணவ யாத்ராஸ் என்ற பேஸ்புக் பக்கத்தை நடத்தும் ஒருவர் ஸ்ரீவாரி அபிஷேகம், அர்ஜித சேவைகள், விஐபி பிரேக் மற்றும் ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான விளம்பரங்களை வழங்குவதாக திருப்பதி தேவஸ்தானம் கவனத்திற்கு வந்துள்ளது. இதுபோன்ற போலி நபர்கள் மற்றும் வலைத்தளங்களால் ஏமாற வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தேவஸ்தான வலைத்தளம் மூலம் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறும் பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஸ்ரீவாரி தரிசன டிக்கெட்டுகள் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான எச்சரித்துள்ளது.