சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் திருத்தேர் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2025 05:07
கோவை; சுண்டை கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே உள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் ஆனி திருமஞ்சன திருக்கல்யாண உற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சித்தர் பீடத்தில் ஆனி திருமஞ்சன திருக்கல்யாண உற்சவ விழா திருத்தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரின் நடு நாயகமாக சிவன் பார்வதி விக்கிரகங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.