பதிவு செய்த நாள்
03
ஜூலை
2025
05:07
ராமநாதபுரம்; ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது.
ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட கோதண்டராமசுவாமி கோயிலில் ஜூன் 5 முதல் ஜூலை 6 வரை ஆனி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் பல்லக்கு மற்றும் இரவில் சிம்மம், ஆஞ்சநேயர், சேஷ உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (ஜூலை 2) இரவு கோதண்ட ராமசுவாமி, சீதா தேவி திருக்கல்யாணம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நகர முக்கிய பிரமுரகர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இன்று இந்திர விமான புஷ்ப பல்லக்கில் சுவாமி உலா நடந்தது. நாளை (ஜூலை 4 ) இரவு குதிரை வாகனம், ஜூலை 5 காலை ரதோற்ஸவம், ஜூலை 6ல் தீர்த்தோற்ஸவம், இரவு தோளுக்கினியன் வாகனத்தில் சுவாமி எழுந்தருளுவதுடன் பிரம்மோற்ஸவ விழா நிறைவு பெறுகிறது.