அக்கிரமேசி கிராமத்தில் குதிரை எடுப்பு விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2025 04:07
நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்தில் குதிரை எடுப்பு விழா நடந்தது. பெரிய அக்கிரமேசி கிராமத்தில் கருப்பணசுவாமி கோயில் உள்ளது. இங்கு ஏப்., 30 அன்று பிடி மண் எடுத்து குதிரை வாகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜூலை 4 காலை 9:00 மணிக்கு குதிரை எடுப்பு விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது குதிரைகள் கள்ளிடனேந்தல் கிராமத்திலிருந்து 7 கி.மீ., தூரம் சுமந்து சென்றனர். 15 ஆண்டுகளுக்கு பிறகும் நடக்கும் இந்த விழாவில் கிராம மக்கள் ஒன்றிணைந்து குதிரை முன்பு நெல் கொட்டி வழிபாடு நடத்தினர். இன்று காலை தொடங்கி 20க்கும் மேற்பட்ட காளைகள் பங்கு பெற்ற எருதுகட்டு விழா நடந்தது. காப்பு கட்டி விரதம் இருக்கும் இளைஞர்கள் காளைகளை அடக்கினர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.