திருச்செந்துார் கும்பாபிஷேகத்திற்காக சென்ற உலர் பழ மாலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2025 05:07
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை பூ சந்தையில் ரூ.12 லட்சத்தில் உலர் பழ மாலைகள் தயார் செய்து அனுப்பப்பட்டது
திருச்செந்துார் முருகன் கோயிலில் நாளை நடக்க உள்ள கும்பாபிஷேகத்திற்கு உலர் பழங்களால் ஆன மாலை செய்ய பக்தர் ஒருவரால் ஆர்டர் தரப்பட்டது. அதன்படி நிலக்கோட்டையை சேர்ந்த பூ வியாபாரி ஆறுமுகம் ரூ. 12 லட்சம் செலவில் உலர் பழங்களால் ஆன மாலைகளை 10 நாட்களாக பணியாளர்கள் மூலம் தயார் செய்தார். 4 அடி முதல் 12 அடி உயரம் கொண்ட 200-க்கு மேற்பட்ட இம்மாலைகள் முழுக்க பிஸ்தா, முந்திரி, பாதாம், ஜெர்ரி, கறுப்பு திராட்சை போன்றவற்றை கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. ஆறுமுகம் கூறுகையில் ‘‘திருச்செந்துார் கோயில் கும்பாபிஷேகத்திற்கு உலர் பழங்களால் ஆன மாலைகள் தயாரித்தது திருப்தியளிக்கிறது’’ என்றார்.