மணகாளி மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா; அம்மனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2025 11:07
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே மணப்பட்டி மணகாளி மாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா நடந்தது. இக்கோயிலில் ஜூன் 30 ல் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கிய நிலையில் தினமும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. ஜூலை 5 ல் பெண்கள் முளைப்பாரி எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர். நேற்று காலை 10:00 மணிக்கு சேவுகப்பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் அக்னிச்சட்டி எடுத்துவந்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று ஆடு பலியிடப்பட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடக்கிறது.