மேட்டாத்தூரில் சாயிபாபா கோவில்கும்பாபிஷேக பணிகள் துரிதம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2012 11:12
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கிருபா சாயிபாபா கோவில் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது.உளுந்தூர்பேட்டை அருகே ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மேட்டாத்தூர் கிராமத்தில் கிருபா சாயி கோவில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. தியான மண்டபம் உட்பட அனைத்து அம்சங்களுடன் கோவில் கட்டப்பட்டுள்ளது.இக்கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருந்து நான்கரை அடி உயரமுடைய சீரடி சாய்பாபா உருவ சிலை கொண்டு வரப்பட்டுள்ளது. வெள்ளை கிரானைட் கல்லால் ஆன இச்சிலை கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. கோவில் பணிகள் முடிந்துள்ள நிலையில் ஜனவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.