Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்னல்களை நீக்கும் வீரபத்ரேஸ்வர ... திருவோண விரதம்; விளக்கேற்றி பெருமாளை வழிபடுவோம்.. பதினாறு வகை செல்வங்களையும் பெறுபோம்! திருவோண விரதம்; விளக்கேற்றி ...
முதல் பக்கம் » துளிகள்
வியாச பூஜையும் சாதுர் மாஸ்ய விரதமும்!
எழுத்தின் அளவு:
வியாச பூஜையும் சாதுர் மாஸ்ய விரதமும்!

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2025
03:07

பகவான் உறங்க ஆரம்பித்தது முதல் எழுந்திருக்கும் வரை ஆற்ற வேண்டிய விரதம் சாதுர் மாஸ்ய விரதம். ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆஷாட பவுர்ணமி - வியாச பவுர்ணமி என்ற நாளில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட்டு ‘வியாஸ பூஜை’ நடத்துவது துறவிகளின் பணி. பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, ‘நான் ரிஷிகளில் வியாசராக இருக்கிறேன்’ என்று கூறியிருப்பதால், அந்த அடிப்படையில் கிருஷ்ண பரமாத்மாவை மத்தியில் வைத்து சாதுர் மாஸ்ய வியாஸ பூஜை நடத்துவது காஞ்சிமடத்தின் வழக்கமாகும். இந்த பூஜை கிருஷ்ண பஞ்சகம், வியாச பஞ்சகம், பகவத் பாத பஞ்சகம், ஸனச பஞ்சகம், திரவிட பஞ்சகம் என்று 5 பஞ்சகங்களை அமைத்து பக்கங்களில் 24 குருமார்களை ஆவாஹனம் செய்து 30 பேர் பூஜை செய்வது, இறுதியில் துறவிகள் சாதுர்மாஸ்ய விரத சங்கல்பம் செய்துகொள்வார்கள். உலக நலனுக்காக அனைத்து தேவதைகளுக்கும் பிரீதி செய்வதே வியாஸ பூஜையின் நோக்கமாகும். இந்து மதத்திற்கு மூல புருஷராக விளங்கும் வியாச பகவானுக்கு ஆண்டுதோறும் சாதுர் மாஸ்ய விரதத்தின் முதலில் சிறப்பு வழிபாடு வியாச பூஜை என்ற பெயரில் நடைபெறுகிறது. பராசரா முனிவரின் புதல்வரும், ஞானியருள் சிறந்தவருமான வேத வியாசருடைய இயற்பெயர் ‘கிருஷ்ண த்வைபாயனர்’ என்பதாகும். வேதப் பகுபாடு செய்தவரும், மகாபாரதம் இயற்றிய வரும், பதினெண் புராணங்களை அருளியவரும், வேதாந்த சூத்திரத்தைத் தொகுத்தவரும் இவரே.


இந்து மதத்திற்கு ஆணிவேராக இவர் போற்றப்படுவதால் குரு பரம்பரை பல இருப்பினும், வேத வியாசர் பெயர் இதில் முக்கியமாகச் சொல்லப்படுகிறது. இந்த வியாச பூஜையில் வியாசர் அவரது நான்கு சீடர்களான பைலர், ஜைமினி, வைசம்பாயனர், சுமந்து ஆகியோரும், ஆதிசங்கரர் அவரது சீடர்களான பத்மபாதர், ஸுரேச்வர், ஹஸ்தாமலகர், தோடகர் ஆகியோரும், மவுனகுருவின் சீடர்களான சனகர், சனந்தனர், ஸநாதனர், ஸநத்குமார் ஆகியோரும் நாரதர், சுகர், கவுடபாதர், கோவிந்த பகவத் பாதர் ஆகிய குருமார்களும், கடைசியாக சுத்த சைதன்யம் என்ற பெயரில் சாளக்ராமமும் பூஜிக்கப்படுகின்றன. துறவிகளாலேயே செய்யப்படும் இந்த பூஜையானது முளையில்லாத அட்சதையைப் பரப்பி நடுவில் கிருஷ்ண விக்ரகமும் சாளக்ராமமும் வைத்து எலுமிச்சம் பழத்தை ஆங்காங்கு வைத்து முறைப்படி ‘குருபரம்பரை ’ பூஜையாக நடத்தப்பெறுகிறது. எப்போதும் யாத்திரையாகச் சென்று கொண்டேயிருக்கும் துறவிகளுக்கு - சன்னியாசிகளுக்கு ‘பரிவ் ராஜகர்’ என்று பெயர். இவர்கள் ஆனி பவுர்ணமி தொடங்கிக் கடைப்பிடிக்கும் சாதுர்மாஸ்ய விரதகாலம் மட்டுமே ஓரிடத்தில் தங்கியிருப்பர். மற்ற காலங்களில் பல பகுதிகளிலும் எப்போதும் யாத்திரையிலேயே இருந்து வருவர்.


மழைக்காலத்தில் ஜீவராசிகள் பெருகி அலையுமாதலின் தங்கள் நடமாட்டத்தால் அவற்றுக்கு இம்சை நேராதவாறு ஒரே இடத்தில் தங்கியிருப்பர். நான்கு மாதங்கள் இவ்வாறு தங்கியிருக்கும் விரதமே ‘சாதுர் மாஸ்ய விரதம்’ எனப்படும். ஆனி மாதம் பவுர்ணமி முதல் இவ்விரதம் தொடங்குகிறது. இக்காலத்தில் வேத, வேதாந்த, உபநிஷத விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வசிப்பார்கள். வியாச பூஜை என்பதும், சாதுர் மாஸ்ய விரதம் தொடங்குவதும் சாந்திரமானப்படி ஆஷாட பவுர்ணமி (இந்த வருடம்: 27.6.2018) அன்று வருவது. இதையே ‘குரு பவுர்ணமி’ என்றும் சொல்வர். எல்லோருக்குமே இந்த பவுர்ணமி உயர்ந்ததே... அன்றைய தினம் அவரவரது ஆசிரியர், குரு ஸ்தானங்களில் உள்ளோரை வணங்குவது மிகச் சிறந்த நற்பலன் தரும். கல்வி, கலை, ஞானம் வளரும்.

 
மேலும் துளிகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சிவராத்திரி விரதம் இருந்து ஈசனை வழிபட குடும்பத்தில் நன்மை பெருகும். சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று ... மேலும்
 
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. பிரதோஷமான இன்று சிவனை வழிபட சிறப்பான ... மேலும்
 
temple news
இன்று அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, பழைய நிஜகல் பகுதியில் அமைந்து உள்ளது உட்டண்ணா ஸ்ரீ வீரபத்ர சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar