Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முனீஸ்வரர் கோவிலில் ... சூலுார் அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் சூலுார் அய்யப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் விநாயகர், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் விநாயகர், அம்மன்  கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2025
10:07

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர், பெருமாள் மற்றும் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த விநாயகபுரத்தில் செல்வ விநாயகர் மற்றும் தேவி கருமாரியம்மன் கோவில் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு செல்வ விநாயகர் கோவில் விமானத்திற்கும், தொடர்ந்து மூலவருக்கும், தேவி கருமாரியம்மன் கோவில், பரிவாரம் மற்றும் நவக்கிரஹங்களுக்கு வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.


காலுார்; காஞ்சிபுரம் அடுத்த காலுார் கிராமத்தில் உள்ள மாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, புதிதாக செய்யப்பட்ட சுவாமி சிலைகள் கரிகோலம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு கலசம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர விமானத்தில் உள்ள மாரி அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.


கிதிரிப்பேட்டை: வாலாஜாபாத் ஒன்றியம், கிதிரிப்பேட்டையில், தண்டு முத்து மாரியம்மன் அகோர வீரபத்திரர் கோவில் உள்ளது. நேற்று, காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடும், 10:30 மணிக்கு கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


புளியம்பாக்கம்: வாலாஜாபாத் அடுத்த, புளியம்பாக்கத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று, காலை 9:00 மணிக்கு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


காக்கநல்லுார்: உத்திரமேரூர் பேரூராட்சி, காக்கநல்லுார் பகுதியில் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், நேற்று, காலை 9:00 மணிக்கு, புனிதநீர், கோவில் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar