தேவகோட்டை; தேவகோட்டையில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் ஷீரடி சாய்பாபா கோயில் அமைத்தார். கோயில் வளாகத்தில் சொர்ண விநாயகர் கோயிலும் ஏற்படுத்தினார். இக்கோயிலை அவரின் குடும்பத்தினர் இரண்டாவது முறையாக பல் வேறு திருப்பணிகள் செய்தனர். தொடர்ந்து கோனேரி ராஜபுரம் சபேச சிவாச்சாரியார் தலைமையில் கணபதி ஹோமம், இரண்டு கால யாக சாலை பூஜைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 6:00 மணியளவில் கும்பாபிஷேகமும் தொடர்ந்து விநாயகர், சாய்பாபா விற்கும் மகா அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோயில் நிர்வாக அறங்காவலர் ஏஆர்.எல். அருணாசலம், வக்கீல் ஏஆர்.எல். சுந்தரேசன் ( அமலாக்கத்துறை வக்கீல்) குடும்பத்தினர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்ததோடு , அனைவரையும் வரவேற்றனர். கும்பாபிஷேகம் விழாவில் முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்ணதாசன், புதுக்கோட்டை திலகவதியார் ஆதினம், கோவிலூர் நாராயண ஞான தேசிக சுவாமிகள், எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன், மாங்குடி, நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அதிகாலையில் கும்பாபிஷேகம் நடந்தாலும் அதிகளவில் பக்தர்கள் கும்ப அபிஷேகம் தரிசனம் செய்தனர்.