பதிவு செய்த நாள்
16
ஜூலை
2025
10:07
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 10ம் தேதி கோலவிக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவில், நேற்று நான்காம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, ஐந்தாம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 7:00 மணி ஆறாம் கால யாக பூஜை, அவபிருதயாகம், விசேஷ த்ரவிய ஹோமம் நடைபெற்றது. காலை 9:00 மணி மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம் மற்றும் காலை 9:30 மணி கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10:30 மணி ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர். 11:00 மணி மூலவர் கந்தசுவாமிக்கு மஹா கும்பாபிஷேகமும், 11:15 மணிக்கு உற்சவர் ஸ்ரீ முத்துக்குமார சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.