நெல்லிக்குப்பம் ஐயப்ப சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2025 04:07
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் ஐயப்ப சுவாமி கோவிலில் தமிழ் மாத பிறப்பு பூஜைகள் நடந்தது. ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்ப சுவாமி கோவிலில் பால், தயிர், சந்தனம் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. ஐயப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ராமு பூசாரி செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குருசாமிகள் ராதா, சிவகுருநாதன், பழனி, கல்யாணசுந்தரம், சாமிபிள்ளை உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.