ஆடி முதல் வெள்ளி; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2025 10:07
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி கமாட்சி அம்மன், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில்களில் அதிகாலை 2 மணி முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு , அம்மனுக்கு சிறப்பு அபஷேகம்,பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதல் பெண் பக்தர்கள் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி , வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் ,காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , பூஜைகள் நடந்தன. பெண்கள் நெய் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். மடப்புரம் காளி கோயிலில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றுவருகிறது.
ஆடி மாதம் முதல் வெள்ளிககிழமையை முன்னிட்டு கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் காளியம்மன் கோவிலில் அமைந்துள்ள மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கே.கே. புதூர் தெரு எண் - 8 ல் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மன் வேப்பிலைகளுக்கு நடுவே மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில், அவினாசி ரோட்டில் அமைந்துள்ள தண்டு மாரியம்மன் கோவில், காட்டூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் | விளையாட்டு மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.