ஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம்; தங்க குடத்தில் புனித காவிரி நீர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2025 10:07
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு தங்கக்குடத்தில் புனித காவிரி நீர் எடுத்துவரப்பட்டது. இன்று முழுவதும் தாயார் சன்னிதியில் சேவை கிடையாது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயாருக்கு நடத்தப்படும் ஜேஷ்டாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், தாயார் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்கநாச்சியார் ஆகியோருக்கு பெரிய திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை காலை 6.00 மணிக்கு கருட மண்டபத்திலிருந்து தங்கக்குடம் எடுத்தல் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு தங்க குடத்தில் புனித காவிரி நீர் எடுத்து வரப்பட்டு தாயார் ஸந்நிதி வசந்த மண்டபம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு இன்று முழுவதும் தாயார் ஸந்நிதியில் சேவை கிடையாது.