பழநி; பழநி சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோயில்களில் ஆடி முதல் வார வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையும் முன்னிட்டு பெரியநாயகி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் நடைபெற்றது. கிழக்கு ரத வீதி வீதி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவகிரி பட்டி உச்சி காளியம்மன் கோயில், ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில், புது தாராபுரம் ரோடு ரணகாளியம்மன் கோயில், கச்சேரி வீதி கூன காளியம்மன் கோயில் அ.கலையமுத்தூர் கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயில், அக்ரஹாரம் கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயில், நெய்க்காரப்பட்டி மண்டுகாளியம்மன் கோயில், பெரிய கலை முத்தூர் ஹைகோர்ட் பத்திரகாளி அம்மன் கோயில் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.