திருப்பூரின் காவல் தெய்மாகிய ஸ்ரீசெல்லாண்டிம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கிறது. அதன்படி, 19வது ஆண்டு குண்டம் திருவிழா, நேற்று பூச்சாட்டு பூஜையுடன் துவங்கியது. வரும், 21 ம் தேதி மகாமுனி பூஜை, 22 ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல், நொய்யலில் இருந்து சக்தி அழைத்தல்; 23ம் தேதி பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல்; வரும் 24ல், கோட்டை முனியப்பன் கோவிலில் இருந்து சூலம் எடுத்து வருதல்;25ல் டவுன் மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு ஊர்வலம்; 27ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 29ம் தேதி காலை, குண்டம் திருவிழா, அக்னி அபிேஷகம், மாவிளக்கு மற்றும் பொங்கல் விழா, மாலையில் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. மஞ்சள்நீர் விழா, 30ம் தேதியும், ஆக., 1ல் மறுபூஜையும் நடக்க உள்ளது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரபூஜைகள் நடக்க உள்ளன. வரும், 23ல் மீனாட்சி அலங்காரம், 24ல்அகிலாண்டேஸ்வரி அலங்காரம், 25ல் சமயபுரம் மாரியம்மன், 26ல் அங்காளம்மன், 28 ல் செல்லாண்டியம்மன் அலங்காரம், 30ம் தேதி மகாலட்சுமி அலங்காரம், ஆக.,1 ல் வாரஹி அம்மன் அலங்கார பூஜைகள் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோமாதா வழிபாட்டுகுழு மற்றும் செல்லாண்டிம்மன் துறை மக்கள், கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.