பெரியகொசப்பள்ளம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2025 02:07
பெண்ணாடம்; பெரியகொசப்பள்ளம் திரவுபதி அம்மன் கோவில் ஆடி தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்ணாடம் அடுத்த பெரியகொசப்பள்ளம் செல்வ மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா, கடந்த 11ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, காலை அம்மனுக்கு அபிஷேகம், இரவு அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று மாலை தீமிதி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீர் உற்சவத்துடன் ஆடித்திருவிழா நிறைவடைந்தது.