கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை பிலாஸ்பூர் ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா ஸ்வாமிகள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இதன் முதல் நிகழ்வாக காலை 6.30மணி அளவில் விக்னேஸ்வர பூஜை நடந்தது. அதை தொடர்ந்து மகா சங்கல்பம், தொடர் நிகழ்வாக மஹன்யாச ஜெபம் | ருத்ர ஆவாஹனம் ,ஸ்ரீ ருத்ர ஜபம், ஏகாதச திரவிய ருத்ர அபிஷேகம்,கோ பூஜை,ஸ்ரீ ருத்ர ஹோமம் ,தம்பதி பூஜை, கலசாபிஷேகம் ஆகியன நடந்தது. நிறைவாக மகாதீபாரதனை நடந்தது.இதில் ஸ்வாமிகள் அனைவருக்கும் அருள் ஆசி வழங்கினார்.நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.