Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வில்லியனுார் திருக்காமீஸ்வரர் ... முட்டகுறிச்சி பத்ரகாளி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக விழா முட்டகுறிச்சி பத்ரகாளி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தி: திண்டுக்கல்லில் சிலை தயாரிப்பு பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
விநாயகர் சதுர்த்தி: திண்டுக்கல்லில் சிலை தயாரிப்பு பணி மும்முரம்

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2025
11:07

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு புது முயற்சியாக விநாயகருடன், முருகனும் சேர்ந்திருப்பது போல் சிலைகள் தயாரிக்கப்படுவதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ஹிந்து பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா முக்கியமானது. இந்த பண்டிகையின்போது, பல்வேறு ஹிந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை தயாரித்து போலீஸ் அனுமதியுடன் பிரதிஷ்டை செய்து வழிபடுவர். வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபடுவர். பூஜை, வழிபாட்டுக்கு பின் மறுநாள், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி ஆக.,27ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. 1 அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சிவன்-பார்வதி மடியில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்றும், சிவபெருமானை விநாயகர் வணங்குவது போலவும் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் தாமரையில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்றும், கற்பக விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்படுகின்றன.


இதுகுறித்து சிலை வடிவமைப்பாளர் தமிழ்செல்வன் கூறியதாவது : விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பேப்பர் கூழ், கிழங்கு மாவு, இயற்கை நிறமிகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிலைகளின் உயரம், தரத்துக்கு ஏற்ப ரூ.500 முதல் ரூ.22 ஆயிரம் வரை விலை உள்ளது. மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பிறகு பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளது. எனவே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திலும் முருகப்பெருமானை இணைக்கும் வகையில் இந்த ஆண்டு புதுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முருகனுக்கு, விநாயகர் ஆசி வழங்குவது, விநாயகர் அருகே வேலுடன் முருகன் நிற்பது, மயில் ஆகியவற்றையும் விநாயகர் சிலையுடன் இணைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar