காரைக்கால் நித்தியகல்யாண பெருமாள் கோவிலில் ஆண்டாள் சேர்த்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2025 03:07
காரைக்கால்; காரைக்கால் நித்தியகல்யாண பெருமாள் கோவிலில் ஆடிமாதத்தை முன்னிட்டு ஆண்டாள் சேர்த்தி சிறப்பு விழிபாடு நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை யொட்டி ஆண்டாள் திருநட்சத்திரம் முன்னிட்டு இன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.முன்னதாக பழங்கள், வளையல்கள் வைத்து ஆராதனைகள் நடந்தது. பின்னர் மூலவர் ரங்கநாத பெருமாள் ரங்கநாயகித் தாயாரும் சிறப்பு அராதனை நடந்தது. மேலும் ஒப்பிலாமணியர் கோவிலில் துர்க்கைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. மேலும் கருமாரியம்மன் கோவிலில் மகாலட்சுமி பூஜை மற்றும் திருவிளக்கு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோயில் முதல் தீர்த்தக்காரர் அரங்கநாதாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.