மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று, ஆடிப்பூர விழா விமரிசையாக நடந்தது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா நடைபெறும். இந்தாண்டு, 54வது ஆடிப்பூர விழா, கடந்த 26ம் தேதி துவங்கியது. ஆதிபராசக்தி அம்மன், பங்காரு அடிகளார் திருவுருவ சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், சுயம்பு அம்மனுக்கு கஞ்சி வார்த்தல் மற்றும் பாலாபிஷேக விழாவை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர், நேற்று முன்தினம் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு பாலாபிஷேக விழா, நேற்று மாலை 4:00 மணி வரை நடந்தது. அதன் பின், பாலாபிஷேக விழாவை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நிறைவு செய்தனர்.