Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடு கோவிலில் பட்டினத்தார் ... திருமலை திருப்பதியில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுக்க கூடாது; தேவஸ்தானம் எச்சரிக்கை திருமலை திருப்பதியில் ரீல்ஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2025
05:07

மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆக.5ம் தேதி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.


சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதம் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான திருவிழாவிற்காக இன்று அதிகாலை சுவாமிகளுக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் கோயில் முன் மண்டபத்தில் வீர அழகர் ஸ்ரீதேவி பூதேவியருடன் எழுந்தருளினார் இதனைத் தொடர்ந்து அர்ச்சகர்கள் கோயில் கொடி மரத்துக்கு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடத்திய பின்பு கொடியேற்றம் நடைபெற்றது.விழா நாட்களின் போது சுவாமி பரங்கிநாற்காலி,பல்லக்கு, குதிரை, சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகபடிகளுக்கு எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆக.5ம் தேதியும், 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு தேரோட்டமும், 9ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானீகர் சோமசுந்தர பட்டர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar