தரிசிக்கும் அன்றே அதிர்ஷ்டம் பெற ஸ்ரீ சாவித்ரி தேவியை வணங்குங்கள்!
பதிவு செய்த நாள்
01
ஆக 2025 10:08
செங்கல்பட்டு; அச்சிறுபாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகையில் சஞ்சீவி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது சாவித்ரி தேவி ஞான ஒளி கோவில். ஞான ஒளி கோவில் வளாகத்துக்குள் அத்திமரத்தால் செய்யப்பட்ட விநாயகர் தண்ணீருக்குள் அமர்ந்தபடி தரிசனம் கொடுக்கிறார். கோவிலில் பிரதான சக்தியாக சாவித்ரி தேவி பிரமாண்டமான மிக உயரத்தில் அமர்ந்திருக்கிறாள். கோவிலுக்கு வரும் அன்பர்கள் கருவறைக்குள்ளேயே சென்று சாவித்ரிதேவியை மூன்று முறை சுற்றி வந்து வழிபடலாம். தங்கள் வாழ்வில் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் ஒரு பேப்பரில் எழுதி, அங்கு உள்ள உண்டியலில் செலுத்தி விடலாம். பின்பு, 18 நாட்களுக்குள்ளாகவே பிரச்சனைகள் தீர்வதோடு, புதிய அதிர்ஷ்ட வாழ்வை கொடுத்து மகிழ்கிறாள் சாவித்ரி தேவி. கடன் பிரச்னையில் அவதிப்படுவோர், திருமணம் நடைபெறவில்லை என்று கஷ்டப்படுவோர், குடும்பத்தில் பல பிரச்னைகளால் சண்டையும் சச்சரவுகளுடன் கவலைப்பட்டுக் கொண்டிருப்போர், குழந்தைப்பேறு இல்லை என்று வேதனைப்படுவோர், தீராத வியாதிகளால் கஷ்டப்பட்டு கொண்டு வாழ்வை வெறுத்துப் போய், நொந்து போய் உள்ளவர்களுக்கு தரிசன நாள் அன்றே மனக்குறைகளை பனி போல் மறைய செய்து, அற்புத வாழ்வை மலர செய்கிறாள் சாவித்ரி தேவி. உலகின் முதல் கோவிலும் இதுவே. சாவித்ரி தேவிக்கு என்று வேறு எங்கும் கோவில் கிடையாது என்பது முக்கிய செய்தி. தன்னுடைய கணவன் உயிரை எடுத்துச் சென்று விட்ட எமனிடமிருந்து கணவனை மீட்டு, எமனையும் மனமாற்றம் செய்த சர்வேஸ்வரியான,சாவித்ரி தேவி ‘மாங்கல்யம் காப்பவள்’ என்ற பெருமையோடு பெரும்பேர் கண்டிகையில் அருள் பாலித்து வருகிறாள். இவருக்கு வலது புறம் காலதர்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அடிக்கடி விபத்து நடப்போர், தீராத நோய்களில் கஷ்டப்படுவோர் இவரை இங்கு வந்து வேண்டிக் கொள்ளலாம். சாவித்ரி தேவிக்கு பின்புறம், காயத்ரி தேவி ஐந்து முகத்துடனும், பத்து கரத்துடனும் அமர்ந்திருக்கிறாள். இவர் சாவித்ரி தேவியின் மூத்த சகோதரியாவார். சகல ஐஸ்வர்யங்களும் தேவை எனில் இவருடைய அருள் தேவை. சாவித்ரி தேவிக்கு இடதுபுறம் எமனுடைய சகோதரரும், சிவபெருமான் மகனுமான கால பைரவர் வீற்றிருக்கிறார். பில்லி, மாந்திரீகம், சூனியம் என்ற பயத்தை போக்கி காலக்கொடுமைகளை வேகமாக குறைத்து விரைவில் காப்பாற்றுபவர் காலபைரவர். இவரை தேய்பிறை அஷ்டமியில் வேண்டிக்கொள்ளலாம். காளிங்க நர்த்தன கிருஷ்ணர் இவரை சனிக்கிழமைகளில் வெண்ணெய் சாத்தி வேண்டிக் கொண்டால் குழந்தைப் பேறு கிடைக்கும். சாவித்ரி கோவிலில் சரஸ்வதி, மகாலட்சுமி, பாண்டுரங்கன் ரகுமாயி காலஹத்தீஸ்வரர் சிவன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இங்கே, 30க்கும் மேற்பட்ட பசுக்களை கொண்ட கோ சாலை உள்ளது. இங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லி அதிர்ஷ்ட வழி காட்டுகிறார் ஸ்ரீ அன்னை அடிகள். இவர் கோவிலின் மேனேஜிங் டிரஸ்டிங் ஆவார். இவருக்கு சொந்த ஊர் திண்டிவனம், இப்போது வசிப்பது சென்னை மேற்கு மாம்பலம். தொடர்புக்கு: ஸ்ரீஅன்னை அடிகள். 9841425456. 9789971571. கோவில் அமைவிடம்: மேல்மருவத்துாரில் இருந்து 9 கி.மீ., தொலைவிலும், அச்சிறுபாக்கத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவிலும், தொழுப்பேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1கி.மீ., தொலைவிலும் பெரும்பேர்கண்டிகை சஞ்சீவி மலையின் அடிவாரத்தில் கோவில் அமைந்துள்ளது.
|