மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திருப்பதியில் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2025 11:08
திருப்பதி; மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று சனிக்கிழமை திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரரை வழிபட்டார்.
திருப்பதி வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று காலை திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் வந்த அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரரை வழிபட்ட அமைச்சருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதம் மற்றும் சுவாமி படம் வழங்கப்பட்டது.