எட்டு ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்ட சந்தனமாரியம்மன் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2025 02:08
தொண்டி; தொண்டி புதுக்குடியில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சந்தனமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொண்டி புதுக்குடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது சந்தனமாரியம்மன் கோயில். 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலில் வரவு செலவு பார்ப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் கோயில் பூட்டப்பட்டுதிருவாடானை தாலுகா அலுவலகத்தில் சாவி ஒப்படைக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளாக பூட்டியிருந்ததால் கிராம மக்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் கோயிலை திறக்க வேண்டும் என அதிகாரிகளை சந்தித்து கிராம மக்கள் விருப்பம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் திருவாடானை தாசில்தார் ஆண்டி தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு, அனைவரும் ஒற்றுமையாக சுவாமி கும்பிட வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். அதன் பிறகு ஜூலை 15ல் கோயில் திறக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டதால் நேற்று காலை பரமக்குடியை சேர்ந்த சிவாச்சாரியார் முருகன் தலைமையில் சிறப்பு ேஹாமம் நடத்தப்பட்டது. அம்மன் மலர், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள்தரிசனம் செய்தனர்.