திருப்பதி பெருமாளுக்கு மின்சார ஸ்கூட்டர் நன்கொடை வழங்கிய பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2025 02:08
திருப்பதி; விஜயவாடாவைச் சேர்ந்த குவாண்டம் எனர்ஜி லிமிடெட் நிர்வாக இயக்குநர்கள் ஸ்ரீனிவாஸ் மற்றும் சக்ரவர்த்தி இன்று திங்கட்கிழமை ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள பிசினஸ் மின்சார ஸ்கூட்டரை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினர். ஸ்ரீவாரி கோயில் முன் ஸ்கூட்டர் பூஜைகள் செய்யப்பட்டு, ஸ்கூட்டர் சாவிகள் தேவஸ்தான கூடுதல் அலுவலர் வெங்கையா சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வாரிய உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.