நமது கோவில்.. நமது பெருமை..; உங்கள் கோவில் சிறப்புகளை சொல்லுங்க!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2025 11:08
வாசகர்களே! உங்கள் பகுதியில் உள்ள ஹிந்து கோவில்கள் பற்றிய சிறப்புகளை சேர்க்க இங்கே பதிவு செய்யுங்கள். தினமலர் இணைய தளத்தில் (www. temple.dinamalar.com) இடம் பெற்றுள்ள மற்றும் இடம் பெறாத கோவில்கள் புதிய தகவல்களை அனுப்புங்கள். அவை தினமலர் இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை. கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது இறை வழிபாடு. உங்கள் பகுதியில் உள்ள கோவில்கள் குறித்த முழு விவரங்களை, தெரிந்த தகவல்களை கீழ்க்கண்ட வாட்ஸ்ஆப் / மெயில் முகவரிக்கு அனுப்பவும். பழமையான கோவில்கள், பராமரிப்பற்ற கோவில்கள் பற்றிய தெரிந்த தகவல்களை அலுப்புங்கள்.
* கோவில் படங்கள் * முகவரி * போன் நம்பர் (அலுவலம், தலைமை குருக்கள், பட்டாச்சாரியர்) *திறக்கும் நேரம் * திருவிழாக்கள் * தல சிறப்புகள்* பொதுத் தகவல்கள் * நேர்த்திக்கடன்
* தல வரலாறு * சிறப்பம்சம் * பரிகாரம் ஆகிய விபரங்களை கீழக்கண்ட வாட்ஸ் ஆப் அனுப்பி வையுங்கள்.