காமாட்சி அம்மன் கோவிலில் லலிதா சகஸ்ரநாமத்துடன் சுவாசினி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2025 12:08
கோவை ; ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்மன் கோவிலில் உலக நன்மையை வேண்டி ஆடி 3-வது செவ்வாய்கிழமை மற்றும் மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டும் 1000 சுமங்கலிக்கு 1000 லலிதா சகஸ்ரநாமத்துடன் சுவாசினி நடை பெற்றது. நிகழ்ச்சியில் மங்கள திரவியத்துடன் பிரசாதம் வழங்கப் பட்டது. இதில் கோவை மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், மேட்டுப்பாளையம், கோபிசெட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.