ஆடி செவ்வாய்; முத்துமாரி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2025 12:08
கோவை; ஆடி மாதம் அம்மன் கோவிலில் களில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இன்று ஆடி 3வது செவ்வாய்கிழமையை முன்னிட்டு கோவை, சாய்பாபா காலனி கே. கே. புதூர் தெரு எண்.08 - ல் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். பூஜைகள் நடந்தது. இதில் மஞ்சள் காப்பு அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் வெள்ளிக் கவசம் வெள்ளி சூலாயுதத்துடன் ஆரஞ்சு வண்ண புடவையில் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.