திருப்புல்லாணி அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2025 03:08
திருப்புல்லாணி; திருப்புல்லாணி தெற்குத்தெரு, புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளை கொட்டு உற்ஸவம் நடந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளுக்கு பிறகு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்தவாறு ஊர்வலம் வந்தனர். பின்னர் ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
* வடக்கு மேதலோடை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. கடந்த ஜூலை 27 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை ஆட்டு கிடாய்கள் பலியிடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களும் கூட்டுப் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாவிளக்கு எடுத்தனர். பெண்கள் கோலாட்டம், கும்மியாட்டம், ஆண்களின் ஒயிலாட்டமும் நடந்தது. அம்மனின் சக்தி கரகம் முன்னே செல்ல பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக சென்றனர். பாரி பெரிய ஊரணியில் கங்கை சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை மற்றும் வடக்கு மேதலோடை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
* சிக்கலில் உள்ள அலங்கார மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட அம்மனின் சக்தி கரகத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. வரிசையாக வைக்கப்பட்ட முளைப்பாரிகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு சிக்கல் நகர் பகுதி வழியாக ஊர்வலமாக வந்து பாரி ஊரணியில் கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.