அவிநாசி; அவிநாசி, வாணியர் வீதியில் ஸ்ரீ முனியப்ப சுவாமி, ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில் உள்ளது. ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர். ஆடி பொங்கல் விழா கடந்த 4ம் தேதி கணபதி ஹோமம், உலக மக்கள் நலம் பெற நந்தா தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து நான்கு ரத வீதிகளில் ஊர்வலம் சென்று, கோவிலுக்கு சென்றனர். அதன்பின், முனியப்ப சுவாமி, ஸ்ரீ ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் ஆடிப்பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. ஸ்ரீ முனியப்பசாமி, ஸ்ரீ ஆதிபராசக்தி கோவில் அறக்கட்டளை, ஆதிபராசக்தி மகளிர் அமைப்பு மற்றும் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.